Saturday, July 7, 2012

ஒரு பயனற்ற பொருள்

Before I begin this post, let me say two things.

1) I'm not a male chauvinist. In fact, I dont know even how to spell it! :-D

2) As you can see, this post is gonna be in Tamizh.
 
காலை 9 மணி . ரயில் நிலையத்தில் சில பேர் ட்ரெயின்க்காக ஆவலாய் காத்திருப்பார்கள் . அவர்களுக்கு அலுவலுக்கு நேரம்  ஆயிருக்குமோ என்னவோ ! சற்று தூரத்தில் சிறியதாய் தெரியும் , ட்ரெயின் வருவது . "ஹப்பாடி !" என்று  நினைப்பார்கள் . ஆனால் கிட்டே வந்தவுடனோ , "செ , இதுக்கு ட்ரெயின் வராமலே இருந்திருக்கலாம்!" என்று நினைப்பார்கள் . அவர்கள் நினைப்பது முற்றிலும் சரியானதே ! நானும் அவ்வாறு நினைப்பவன் தான் .

ஏனென்றால் , அது ஒரு பயனற்ற பொருள் . வெட்டி பெருமை பீத்திகொள்வதற்கு விடப்பட்ட ஒன்று . லேடீஸ் SPECIAL  ட்ரெயின் . எப்பொழுதுமே காலியாக செல்லும் . அதில் இருக்கும் பெண்கள் எல்லோரும் கூடி உட்கார்ந்தால் 4 பெட்டிகள் கூட முழுவதும் நிரம்பாது ; கடுப்பாக இருக்கும் . அதுத்த ட்ரெயின் கூட்டமாக வரும் . மேலும் தாமதம்  ஆகும்.

சரி , லேடீஸ் SPECIAL தான் விட்டீர்கள் , அதை நன்றாக கொட்டை எழுத்தில் போட வேண்டியது தானே ? ஏன்  இந்த கஞ்சத்தனம்? சிறியதாய் ஒரு பெண்ணின் முகம் கொண்ட ஒரு வரைபடம் MSB  என்பதற்கு அருகில் வைக்கிறார்கள் . ஏன்? இன்னும் சிக்கனமாய் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைக்க வேண்டியது தானே?

இதை காணாமல் , தெரியாமல் ஏற வருபவர்களுக்கு ஒரு போலீஸ் அம்மா அங்கே வாசலில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு , "தோப்பு, தோப்பு" என்று தட்டும். ஏதோ மந்தை ஆதுகளை விரட்டுவது போல ! மிகவும் கேவலமாக இருக்கும் !

"ஏன் டா? ட்ரெயின் SCHEDULE  பாக்க வேண்டியது தானே?", என்று நீங்கள் என்னை கேக்கலாம்.. பார்த்து என்ன பயன்? தாமதம் தாமதம் தானே? தலை தெறிக்க ஓடி வருபவனுக்கு SCHEDULE  நின்று பார்க்க நேரம் உள்ளதா  என்ன?

அப்படி பெண்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய வேண்டுமென்றால் , 9இல் 6 பேட்டிகள் பெண்களுக்கு ஒதுக்க வேண்டியது தானே ?


எதையும் சிறிதும் யோசனை செய்யாமல் வேலை செய்யும் மக்கள் ! சிரமம் என்னவோ , 'சிறிது' அதிகமாய் தூங்கிவிட்ட என் போல் இருப்பவர்களுக்கு தான் ! இவ்வாறு சில யோசனைகளும் , இந்த ட்ரெயினை விட்டவர்களை திட்டி சில கொச்சையான சொற்களும் வந்து செல்லும் நேரத்தில் அதுத்த ட்ரெயின் வரும் . நிரம்பி வழிந்து கொண்டு .

"நம் தலை எழுத்து ! நாம் தானே லேட்டாக எழுந்தோம்?", என்று நினைத்துக்கொண்டு தொங்கிக்கொண்டு செல்லும் பிழைப்பு ! கொடுமையடா !

2 comments:

  1. haha :D you were thinking a long time to put abt this :P

    ReplyDelete
  2. Yeah! Each time after German class, nothing irritated me more than the sight of this useless train :-/

    ReplyDelete

Say what you feel ! Just like I have :)